SRI NAGASAKTHI AMMAN THAGAVAL MAIYAM
ஶ்ரீ நாகசக்தி அம்மன் தகவல் மையம்
WWW.SRINAGASAKTHIAMMAN.COM / WWW.SAKTHIMATRIMONY.NET
செல்: 97151 86112
Mail: srinagasakthiamman@gmail.com
ஶ்ரீ நாகசக்தி அம்மன் கோவில் - பூஜைக்குரிய பாடல்கள்
ஶ்ரீ நாகசக்தி அம்மன் கோவில்
வரக்கால்பட்டு
ஶ்ரீ நாகசக்தி அம்மன் கோவில் - இஷ்டசித்தி விநாயகர் துதி
( வெண்பா )
ஆழ்ந்தபக்தி யோடுசதா அன்புடனே அஞ்சலிசெய்
சூழ்நிலையில் தோன்றும்பல சோதனையால் வாழ்வில்வரும்
கஷ்டநஷ்டம வறுமை கவலைபிணி தீர்த்தருளும்
இஷ்டசித்தி விநாயகனை ஏத்து.
துர்க்கை அம்மன் ஸ்துதி - ஶ்ரீ மங்கள சண்டிகா ஸ்தோத்திரம்
எப்பேற்பட்ட கஷ்டங்களிலிருந்து விடுபடவும் எண்ணியது எண்ணியபடி நடக்கவும் கலிகாலப் ப்ரத்ஷ்ய தெய்வமான துர்க்கையை...

ராகு காலத்தில் வழிபடுவது பிரத்யஷ பலனை தருகிறது. அச்சமயம் ஆலயங்களில் உள்ள துர்க்கை சந்நிதியில் பின்கண்ட சுலோகத்தைச் சொல்வது விஷேசம். இம்மாதிரி மேலே கண்ட மூன்று கிழமைகளில், ஒரு கிழமையில் ஒன்பது தொடர்ந்து செய்வதால் ஒன்பதாவது கிழமைக்குள்ளேயே கோரியது நடைப்பெறுகிறது என்பது பலருடைய அனுபவம்.
பூஜைக்குரிய நேரம்
ஞாயிற்றுக்கிழமை :    மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
செவ்வாய்க்கிழமை :    மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை
வெள்ளிக்கிழமை :    காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை
ராகு கால துர்க்கா அஷ்டகம்
( ஹரிவராஸனம் மெட்டில் பாடவும் )
வாழ்வு ஆனவள் துர்க்கா வாக்குமானவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்
தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள்
தாபம் நீக்கியே என்னைத்தாங்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
உலகை யீன்றவள் துர்க்கா உமையுமானவள்
உண்மையானவள் எந்தன் உயிரைக்காப்பவள்
நிலவில் நின்றவள் துர்க்கா நித்திய மானவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
செம்மையானவள் துர்க்கா ஜெயமுமானவள்
ஆம்மையானவள் அன்புத் தந்தை யானவள்
இம்மையானவள் துர்க்கா இன்பமானவள்
மும்மையானவள் என்றும் முழுமை துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
உயிறு மானவள் துர்க்கா உடலுமானவள்
உலகமானவள் எந்தன் உடமை யானவள்
பயிறு மானவள் துர்க்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
துன்ப மற்றவள் துர்க்கா துரிய வாழ்பவள்
துறையு மானவள் இன்பத் தோனி யானவள்
அன்பு உற்றவள் துர்க்கா அபய வீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
குருவு மானவள் துர்க்கா குழந்தை யானவள்
குலமு மானவள் எங்கள் குடும்ப தீபமே
திருவு மானவள் துர்க்கா திரிசூலி யானவள்
திலகமாய் என்றும் திகழும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே
அன்பு துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
கன்னி துர்க்கையே இதயக் கமல துர்க்கையே
கருணை துர்க்கையே இதயக் கமல துர்க்கையே
கருணை துர்க்கையே வீர சுகுண துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
குறிப்பு :
  • துர்க்கை அம்மன் துதி பாடும் முன் அகல் விளக்கேற்றி, புஷ்பம் வைத்து துதி பாடல் தொடங்க வேண்டும். எலுமிச்சை அகல் விளக்கேற்றல் மிக சிறப்பு
  • தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே என்ற நாமம் பாடும் பொழது ஒவ்வொரு தடவையும் கையெடுத்துத் தொழது நமஸ்காரம் செய்ய வேண்டும்.
  • இப்பாடலை பாடிக் கொண்டே அடிமேல் அடி வைத்து 7 முறை துர்க்கை அம்மனை வலம் வந்து முடித்தல் வேண்டும்.